search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம். ரோஜா"

    2019 சட்டசபை தேர்தலில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை வாணி விஸ்வநாத் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. #VaniViswanath
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடுவை எதிர்த்து போட்டியிட்டு 858 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    தமிழர்கள் இந்த தொகுதியில் அதிகம் வசித்தாலும் தமிழ் நடிகையான ரோஜா குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது. பெண்களின் வாக்கு அதிகமாக பதிவானதும் ரோஜா வெற்றிக்கு ஒரு காரணம்.

    இந்த நிலையில் 2019 சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜாவை எதிர்த்து ஒரு நடிகையை களமிறக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதன்படி நடிகை வாணி விஸ்வநாத்தை வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சி தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் நகரிக்கு வந்த நடிகை வாணி விஸ்வநாத் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு அழைப்பின் பேரில் விரைவில்தான் தெலுங்கு தேசம் கட்சியில் இணையப் போவதாக அறிவித்தார்.

    நகரி தொகுதியில் வாணி விஸ்வநாத்தையே களம் இறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


    ரோஜாவுக்கு நகரியில் உள்ள எதிர்ப்புகள், பெண்கள் ஆதரவு ஆகியவைகளை தெலுங்கு தேசம் கட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் 2 நடிகைகள் போட்டி போட இருப்பது முடிவாகிவிட்டது.

    நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் அரசு மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தலைமை தாங்குவதாகவும், தெலுங்கு தேசம் கட்சி மந்திரி அமர்நாத் ரெட்டி கட்டிடத்தை திறந்து வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் பங்கேற்ற நடிகை ரோஜா பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்தில் இருந்து பாத யாத்திரையாக தொண்டர்களுடன் வந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் குடிபோதையில் ரகளை செய்து ரோஜாவை தாக்க முயன்றனர். தொண்டர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அரண் போல் பாதுகாத்து மேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நிகழ்ச்சிகள் பிரச்சினையின்றி நடந்தது. கட்டிட திறப்பு விழாவுக்கு ரோஜா தலைமை தாங்கினார். மந்திரி அமர்நாத் ரெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேடையில் நடிகை ரோஜாவும், மந்திரி அமர்நாத் ரெட்டியும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். #VaniViswanath #Roja
    ×